தீபாவளி மலர் – 2021
தீபாவளிக் கொண்டாட்டம்
தீபாவளி குறித்து விநாடி-வினா பாணியில் சுவராசியமான கேள்வி-பதில்களைத் தருகிறார் பிரபல குவிஸ் மாஸ்டர் ஜி.எஸ்.எஸ்;
பிரபல கரிசல் பெண் எழுத்தாளர் பாரததேவி எழுதிய தீபாவளி குறித்த மண் மணம் கமழும் அனுபவக் கதை;
பிரபல இதயவியல் மருத்துவரும் எழுத்தாளருமான கல்யாணி நித்யானந்தன் தீபாவளி குறித்த மலரும் நினைவுகளை அசைபோடுகிறார்.
ஆன்மிகம்
தீபாவளிக்கும் சமணத் தீர்த்தங்கரர் மகாவீரருக்கும் இடையிலான ஆழ்ந்த தொடர்பு, போற்றப்படும் சைவ இலக்கியமான திருமந்திரத்தைப் படைத்த திருமூலர், கிருஷ்ணர்-ராதைக்கான அபூர்வக் கோவிலான நிதிவன், கிருஷ்ணர் மீது பக்தி கொண்ட பக்த மீரா, சர்வ மதத்தினரும் வழிபடும் வேளாங்கண்ணி, கடன் குறித்த நபிகளின் வழிகாட்டுதல் உள்ளிட்ட கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
பிரபல ஓவியர் கேசவ், கிருஷ்ணா குறித்து தினமும் வரைந்துவரும் கிருஷ்ணா ஃபார் டுடே ஓவியங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு, நெல்லை கோவில்களில் வரையப்பட்டுள்ள நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு போன்ற ஒளிப்படக் கட்டுரைகள் இந்தப் பகுதிக்குக் கூடுதல் அழகு சேர்க்கின்றன.
சினிமா
தமிழ் சினிமாவில் தற்போது கவனம் பெற்றுவரும் முன்னணி நாயகிகளான ஜோதிகா, த்ரிஷா, சமந்தா, காஜல், ஷ்ரத்தா ஸ்ரீநாத், சாய் பல்லவி, அஞ்சலி, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரைப் பற்றிய விரிவான ஆளுமைக் கட்டுரைகள்.
திரையுலகில் 50 ஆண்டுகளைக் கடந்துவிட்ட மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் தனித்தன்மை, மம்முட்டியின் மலையாளத் திரையுலகம், மம்முட்டியின் தமிழ்த் திரைப்படங்கள் குறித்து அலசும் தனித்தனிக் கட்டுரைகள்.
சிறுகதை
சமீபத்தில் மறைந்த கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ராஜநாராயணனின் புகழ்பெற்ற சிறுகதைகளான கதவு, நாற்காலி, கன்னிமை, கோமதி, கோபல்லபுரத்து மக்கள் ஆகிய சிறுகதைகள்.
பெண்கள்
வரலாற்றில் பெரும் மாற்றங்களை நிகழ்த்திய பெண்களான போராளி அலெக்சாண்டா கொலந்தாய், ஓவியர் பிரீடா காலோ, இளம் எழுத்தாளர் ஆன் பிராங்க், அமைதித் தூதுவர் சடாகோ சசாகி ஆகியோரைப் பற்றிய கட்டுரைகள்.
ஒலிம்பிக்
ஒலிம்பிக்கில் அடுத்தடுத்து இரண்டு பதக்கங்களை வென்ற பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, ஒலிம்பிக் வாள்வீச்சுப் போட்டியில் முதன்முறையாக இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீராங்கனை பவானிதேவி, ஒலிம்பிக் வரலாற்றில் நிகழ்ந்த சுவாரசிய சம்பவங்கள்.
வாழ்வு இனிது
பெரும் மற்றங்களை ஏற்படுத்திய முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷீலா ராணி சுங்கத்தின் விரிவான பேட்டி; பிரபல தமிழ் எழுத்தாளர்கள் ச. தமிழ்ச்செல்வன், எஸ். ராஜகுமாரன்
மாத்தளை சோமு, அமிர்தம் சூர்யா ஆகியோரின் சிறப்புக் கட்டுரைகள்; பிரபல எழுத்தாளர் யூமா.வாசுகியின் குழந்தைகள் கதை உள்ளிட்டவை இந்த தீபாவளி மலரில் இடம்பெற்றுள்ளன.