திருமந்திரத்தைத் தழுவி, இக்காலத்தவருக்கும் இக்காலம் நம் முன்னர் விடுக்கும் கேள்விகளுக்கும் பதிலாகவும் தீர்வுகளாகவும் இந்நூல் அமையும்
சமயப் படைப்பு என்ற வரையறையைத் தகர்த்து தனித்துவமான மெய்யியல் நூலாகத் திகழும் திருமந்திரத்தைத் தழுவி, இக்காலத்தவருக்கும் இக்காலம் நம் முன்னர் விடுக்கும் கேள்விகளுக்கும் பதிலாகவும் தீர்வுகளாகவும் இந்நூல் அமையும். யோக முறைகள் துவங்கி துமிகளின் இயற்பியல் (particle physics) வரை எளிமையும் கவித்துவமும் கொண்ட நடையோடு ஆராயும் இந்நூல், பொருள்சார் வாழ்க்கைக்கு அப்பால் கேள்விகளையும் தேடலையும் தொடங்கும் எந்தச் சமயத்தவருக்கும், உண்மையை நோக்கிப் பயணப்பட ஆசைப்படும் எவருக்கும் கைவிளக்காகும். இந்து தமிழ் திசை வெளியீடாக ‘உயிர் வளர்க்கும் திருமந்திரம்’ முதல் பாகம் நூலுக்கு வாசகர்கள் தந்த ஆதரவும் உற்சாகமும் அதிகம். ‘உயிர் வளர்க்கும் திருமந்திரம்’ நூலின் இரண்டாம் பாகம் நூலுக்கும் கிடைக்கும் என்று நம்புகிறோம்.
Check Availability for Print Edition at your locality.