பள்ளியிலும் கல்லூரியிலும் சிறப்பாகப் படித்து நல்ல மதிப்பெண்களைக் குவிக்கும் மாணவர்கள் அனைவராலும் நல்ல வேலைவாய்ப்பைப் பெற முடிவதில்லை. இதற்கு பல காரணங்கள் இருப்பினும் 21-ம் நூற்றாண்டு திறன்கள் குறித்த புரிதல் இன்னமும் பரவலாகாதது முக்கிய காரணமாக அறியப்படுகிறது. இந்த நூற்றாண்டுக்கென புதிதாக மனிதக்குலத்துக்கு ஆற்றல்கள் தேவைப்படுகிறதா என்றால் நிச்சயம் ஆமாம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் இது தொழிற்புரட்சி 4.0 காலம் என்றழைக்கப்படுகிறது. 19-ம் நூற்றாண்டில் தோன்றிய தொழிற்புரட்சியினால் பலவிதமான இயந்திரங்களுடன் மனிதர்கள் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்படுத்தியது. அதுவே தொழிற்புரட்சி 4.0 காலமானது இயந்திர மனிதர்களான ரோப்போகளுடனும் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மனிதர்களுடனும் கைகோர்த்து பணியாற்றும் அவசியத்தை உண்டுபண்ணியிருக்கிறது. இங்கு தொழில்நுட்ப திறன்களுக்கு இணையாக முன்பு எப்போதும் இல்லாததைவிடவும் கூடுதலாக மனவியல் திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
புதிதாக ஆங்கிலத்துக்குள் அடியெடுத்து வைப்பவர்களை மட்டுமல்லாமல் ஏற்கெனவே மொழியில் ஆளுமைப் படைத்தவர்களையும் இத்தொடர் ஈர்த்துவருகிறது. எவ்வளவு கடினமான கருத்தையும் சிரிக்கச் சிரிக்கப் புரியவைக்க முடியும் என்பதைத் தன்னுடைய லாகவமான எழுத்துத் திறமையால் தொடர்ந்து நிரூபித்துக்காட்டுபவர் ஜி.எஸ்.எஸ். ஏற்கெனவே இரண்டு புத்தகங்களாக வெளியிடப்பட்ட இந்தத் தொடரின் அடுத்த பகுதியைத் தற்போது வெளியிடுகிறோம். சிரித்து, ரசித்து படித்தபடியே உங்களுடைய ஆங்கில அறிவை மேருகேற்றக் கைகொடுக்கும் கையேடு இது.
எழுத்துத் தேர்வில் உயரிய மதிப்பெண் குவிக்கும் பலர் சறுக்கி விழுவது நேர்முகத் தேர்வில்தான். இந்த சோகம், வழக்கமான அலுவலகப் பணிவாய்ப்பு முதல் குடிமைப் பணிவரை பொருந்தும். ஏனென்றால், நேர்முகத் தேர்வை அணுகுவதற்கான பாடத்திட்டம் எந்த பல்கலைக்கழகத்திலும் கிடையாது. இதற்கென குறுக்குவழியோ சூத்திரங்களோ கிடையாது. ஆனால், நேர்முகத் தேர்வில் வெற்றி பெற பல நுட்பங்கள் உள்ளன. அதன் அடிப்படையில்தான் தேர்வாளர்கள் நேர்முகத் தேர்வை நடத்தித் தங்களுக்கு தேவையான ஊழியர்களைத் தேர்வு செய்கிறார்கள். இத்தகைய நுட்பங்களை நுணுக்கமாக விளக்கும் புத்தகம்தான், ‘நேர்முகம்-கவனம்’.
Check Availability for Print Edition at your locality.