Format: Print
Author: பாமயன்
Publisher: தமிழ் திசை
இயற்கை வேளாண்மை செய்ய விழைபவர்களுக்கு உதவுவதற்காகவே இந்த நூல் உருவாகியிருக்கிறது. மிகவும் விரிவாகவும் படிப்படியாகவும் இயற்கை வேளாண் முறைகள் இந்த நூலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. வெறும் நடைமுறைக் கையேடாக மட்டுமில்லாமல், ஏன் இந்த முறைகளை பயன்படுத்த வேண்டும் என்ற பின்னணி குறித்தும் இந்த நூல் விளக்கியுள்ளது. இயற்கை வேளாண்மைத் துறையில் நெடிய அனுபவம் பெற்றவரும் சிறந்த சூழலியல் எழுத்தாளருமான பாமயன் இந்த நூலை எழுதியுள்ளார். இன்றைய காலகட்டத்தில், இப்படி ஒரு நூலை எழுத அவரைவிட வேறு யாரும் இவ்வளவு பொருத்தமாக இருக்கமாட்டார்கள்.