தீபாவளி மலர் – 2020

₹ 125.00( Save ₹ 31 )

Format: Print

Publisher: தமிழ் திசை

கரோனா வைரஸ் எத்தனையோ சிக்கல்களைக் கொண்டுவந்திருந்தாலும், நிறைய நல்ல விஷயங்களையும் சேர்த்தே கொண்டுவந்திருக்கிறது. அவற்றைப் பற்றி ஒரு அலசல் கரோனா வைரஸ் காலத்தில் சென்னையின் அடையாளமாகத் திகழும் பகுதிகளின் காட்சித்தொகுப்பு. இதே காலத்தில் திருநெல்வேலி மாவட்ட கரகாட்டக் கலைஞர்களின் மாறுபட்ட ஒளிப்படத் தொகுப்பு. கரோனா காலத்தில் வானவெளியில் இயற்கை தீட்டிய ஓவியங்கள் குறித்த காட்சித்தொகுப்பு என பல்வேறு ஒளிப்படத் தொகுப்புகள் புதுமைக் காட்சி அனுபவங்களைத் தரும். என்ன இருந்தால் தீபாவளி சிறக்கும் - கர்னாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன், நாடகக் கலைஞர் கிரேசி பாலாஜி, ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வைத் திறனற்ற பூரணசுந்தரி கூறுகிறார்கள். ஆன்மிகப் பகுதியில் வழக்கமான கட்டுரைகளுடன் வீரமாமுனிவர் வாழ்ந்த ஏலாக்குறிச்சி, மலையாள முஸ்லிம்களின் மாப்பிள்ளைப் பாட்டு சினிமாவுக்குப் போன எழுத்தாளர்கள்- பிரபல எழுத்தாளர்கள் சுபா, வேல.ராமமூர்த்தி, ராஜு முருகன், குட்டி ரேவதி, திருப்பூர் கிருஷ்ணன் ஆகியோரின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் சிறப்பு கட்டுரைகள் சிவாஜி, ரஜினி-கமல், தனுஷ்-விஜய் சேதுபதி - நடிப்புத்திறன் பற்றி மாறுபட்ட கட்டுரைகள். அத்துடன் எஸ்.பி.பியின் திகட்டாத 50 பாடல்கள், இயக்குநர் மகேந்திரனின் திரைப்படங்களில் இளையராஜாவின் இசை என திரையிசைப் பற்றிப் பேசும் கட்டுரைகளும் உண்டு. புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி, கு.ப. ராஜகோபாலன், லா.ச. ராமாமிர்தம், விந்தன், இலட்சுமண பெருமாள் என ஆறு பேரின் கதைகள், வேளாண்மை, தெருக்கூத்து, ஓவியங்கள், சாமுத்ரிகா லட்சணம் கட்டுரைகள் மற்றும் பல சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

Related Books

மௌனம் கலைத்த சினிமா

இந்தியாவின் வெவ்வேறு மாநிலத் திரையுலகங்கள் உருவான விதம், அதன் பின்னணியில் இருந்த கலைஞர்களின் அர்ப்பணிப்பு எனப் பல விஷயங்களை உள்ளடக்கி ‘காமதேனு’ இதழில் எழுத்தாளர் சோழ நாகராஜன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. ஒவ்வொரு நிலத்தின் தனித்த பண்பாட்டுக்கூறுகளை உள்ளடக்கிய அம்சங்களும் இப்புத்தகத்தில் இயல்பாக பதிவாகியிருக்கின்றன. அந்தந்த மொழியின் வரலாறு, அது பேசப்படும் மக்களின் பண்பாட்டுச் சூழல், பிராந்திய மொழி சினிமாவின் பாதைக்கு அது அடித்தளமிட்ட பின்னணி என அடுக்கடுக்கான விஷயங்களை ஆற்றொழுக்காகப் பதிவுசெய்திருக்கிறார் சோழ நாகராஜன். இந்தியாவின் முதல் பேசும்படமான ‘ஆலம் ஆரா’ வெளியானபோது ரசிகர்கள் அதை எப்படி உள்வாங்கிக்கொண்டனர், ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடல்கள் திரையரங்கில் காட்சியுடன் ஒலித்தபோது அதை எப்படியெல்லாம் ரசித்தனர் என்பன உள்ளிட்ட தகவல்களை சுவாரசியம் குன்றாமல் தொகுத்திருக்கிறார் நூலாசிரியர். திரைக்கலைஞர்கள் தனிப்பட்ட வாழ்வில் எதிர்கொண்ட சவால்கள், கலை வெளிப்பாட்டின் மூலம் சமூக அங்கீகாரத்தை அவர்கள் வென்றெடுத்த தருணங்கள் என உத்வேகமூட்டும் வரலாறுகளும் திரைப்பட வரலாற்று நதியினூடே பளபளக்கும் கூழாங்கற்களாய் பதிவாகியிருக்கின்றன.

விளையாட்டாய் சில கதைகள்

ஒலிம்பிக் தொடங்கி உலகில் நடைபெற்று வரும் பெரிய விளையாட்டுத் தொடர்களில் தங்கப்பதக்கம் பெற வேண்டும். முதன்மை பெற வேண்டும் என்று நினைக்காத நாடுகள் இல்லை என்று சொல்லலாம். உலக அளவில் பல்வேறு விளையாட்டுகளில் விளையாடி சாதனைப் படைத்தவர்கள் எல்லோருமே விளையாட்டு வீரர்கள்தான். அந்தச் சாதனையின் பின்னால், ஒவ்வொரு வீரர், வீராங்கனையின் பின்னணியில், அவர்கள் சந்தித்த சவால்கள், தடைகள் ஏராளம் இருக்கும். அதையெல்லாம் தாண்டி அந்த விளையாட்டில் புகழ் பெற அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்கு அளவே இருக்காது. அந்த விளையாட்டுப் பயணத்தில் சர்வதேச அளவில் அவர்கள் சந்தித்த சுவையான, சவாலான தருணங்களுக்கும் பஞ்சம் இருக்காது. அப்படி விளையாட்டில் வெற்றிக்கொடிகளை உயரப் பறக்கவிட்டர்கள், அவர்கள் விளையாடிய காலத்தில் நடந்த சுவாரசியமான, சுவையான, சவாலான நிகழ்வுகளின் தொகுப்புதான் இந்த ‘விளையாட்டாய் சில கதைகள்’ என்ற நூல். இந்த நூல் விளையாட்டில் நம்பிக்கை நட்சத்திரங்களாக விளங்கிய வீரர், வீராங்கனைகளின் வித்தியாசமான, சுவாரசியமான கதைகள், நிகழ்வுகள் என நூறு தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்த நூல் மற்ற விளையாட்டு நூல்களிலிருந்து வித்தியாசப்படுகிறது.

தமிழ்நாட்டுச் சட்ட மேதைகள்

எழுத்தாளர் அசோகமித்திரனின் ‘18வது அட்சக்கோடு’ நாவலில், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் திருவிதாங்கூர் திவானாக இருந்த சர்.சி.பி.ராமசாமி குறித்த விவரிப்பு உள்ளது. இதன் வழி சர்.சி.பி.ராமசாமியை தமிழ் வாசகர்கள் அறிவார்கள். ஆனால், சி.பி.ராமசாமி என்ற ஆளுமையின் முழுமையான சித்திரத்தை உதாரணமான சம்பவங்களுடன் அன்பரசன் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். உலகின் முதல் இடதுசாரி ஜனநாயக அரசு கலைக்கப்பட்டபோது அதைக் கண்டித்து சி.பி.ராமசாமி குரல் கொடுத்தது இதற்கு ஒரு சோறு பதம். இந்த நூலில் சட்டத் துறை ஆளுமைகளின் வாழ்க்கைச் சம்பவங்கள் மட்டுமல்லாது, அவர்களது வாதாடும் பண்பும் அழகாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. உதாரணமாக இடதுசாரி வழக்கறிஞராக அடையாளம்பெற்ற என்.டி.வானமாமலை நீதிமன்றத்தில் வாதாடும்போது எதிர்த் தரப்பு வழக்கறிஞரையோ வாதி/பிரதிவாதிகளையோ ஒரு சுடு சொல்கூடச் சொல்லமாட்டார் என நூலாசிரியர் கூறுகிறார். புகழ்பெற்ற லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் தியாகராஜ பாகவதருக்காகவும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்காகவும் வாதாடிய வி.எல்.எத்திராஜின் வாதாடும் திறனையும் சுவைபட அன்பரசன் விவரித்துள்ளார். வாதி, பிரதிவாதி, சாட்சிகள், வழக்கறிஞர்கள் நிறைந்த அறையில்கூட நீதிபதிகளுக்கும் தனக்கும் ஓர் அந்தரங்கமான உரையாடலை சாத்தியப்படுத்தக்கூடிய ஆளுமையாக எத்திராஜ் இருந்துள்ளார்.

0
Help & Support