Format: Print
Publisher: தமிழ் திசை
கொண்டாட்டம் பகுதி: ‘மதுரை சித்திரைத் திருவிழா’ குறித்த சித்திரம்; அந்தக் கால விடுமுறைகளை குழந்தைகள் எப்படிக் கழித்தார்கள் என்பது குறித்து அனுபவம். ஆன்மிகப் பகுதி: திருப்பதி வேங்கடாசலபதி, ஏரி காத்த ராமர் கோயில், சிங்கப்பெருமாள் கோயில் என ராமரின் பல்வேறு அவதாரங்கள் சார்ந்த கோயில்கள் குறித்த கட்டுரைகள், பத்து சித்தர்கள் குறித்த பதிவுகள். சினிமா பகுதி: நகைச்சுவை திரைக்கலைஞர்கள் வடிவேலு, சூரி, ‘யோகி’ பாபு, ‘போண்டா’ மணி குறித்த தனித் தனிக் கட்டுரைகள்; ‘நாம் இருவர்’ டி.ஏ. ஜெயலட்சுமி தொடங்கி எம்.என். ராஜம், வாணிஸ்ரீ, ராஜசுலோச்சனா, விஜயகுமாரி, விஜயலலிதா வரை அந்தக் கால நாயகிகள் குறித்த அரிய தகவல்கள் அடங்கிய கட்டுரைகள். பயணம் பகுதி: சிறந்த பயண எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்த விரிவான கட்டுரை; கடற்கரையோர சுற்றுலாத் தலங்கள் பழவேற்காடு, பிச்சாவரம், சோழமண்டலக் கடற்கரையோரக் கோட்டைகள் குறித்த கட்டுரைகள். நாகஸ்வர மேதை காருக்குறிச்சி அருணாசலம் நூற்றாண்டு: என்.ஏ.எஸ். சிவகுமார், இசை அறிஞர் நா. நம்மது, கரிசல் எழுத்தாளர்கள் கி. ராஜநாராயணன், கு. அழகிரிசாமி, காருக்குறிச்சியாரின் மகள் சுப்புலட்சுமியின் ஆகியோரின் கட்டுரைகள். ஒளிப்படக் கட்டுரைகள்: கோயம்பேடு காய்கறிச் சந்தை: கரோனா கால மனிதர்கள்; கரோனா காலக் குடும்பங்கள்; பழவேற்காடு மீன்பிடித்தல்.