இந்து தமிழ் இயர்புக் 2022

₹ 275.00( Save ₹ 27 )

Format: Print

Author: இந்து தமிழ் திசை

Publisher: தமிழ் திசை

ஐ.ஏ.எஸ்., டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குக் கைகொடுக்கும் புத்தகம் இது. தமிழகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணிக் கட்டுரையாளர்களும் தேர்ந்த ஆசிரியர்களும் இந்தப் புத்தகத்தில் பங்களித்துள்ளனர். போட்டித் தேர்வாளர்களுக்கு மட்டுமல்லாமல் பொது அறிவை வளர்த்துக்கொள்ள விரும்புபவர்கள், விநாடி-வினா போட்டிகளில் பங்கேற்பவர்கள், உலக நிகழ்வுகளை விரல்நுனியில் வைத்திருக்க விரும்பும் அனைவருக்கும் இந்த நூல் பயன்தரும். பாரம்பரியமிக்க ‘தி இந்து’ குழுமத்தின் இளைய வாரிசான ’இந்து தமிழ்’ நாளிதழின் ஆசிரியர் குழுவின் ஆக்கத்தில் உருவாகியுள்ள மற்றுமொரு பெருமைக்குரிய படைப்பு ‘இந்து தமிழ் இயர்புக் 2022’.

Related Books

இயர்புக் காம்போ ஆஃபர்

ஐ.ஏ.எஸ்., டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குக் கைகொடுக்கும் புத்தகம் இது. தமிழகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணிக் கட்டுரையாளர்களும் தேர்ந்த ஆசிரியர்களும் இந்தப் புத்தகத்தில் பங்களித்துள்ளனர். போட்டித் தேர்வாளர்களுக்கு மட்டுமல்லாமல் பொது அறிவை வளர்த்துக்கொள்ள விரும்புபவர்கள், விநாடி-வினா போட்டிகளில் பங்கேற்பவர்கள், உலக நிகழ்வுகளை விரல்நுனியில் வைத்திருக்க விரும்பும் அனைவருக்கும் இந்த நூல் பயன்தரும். பாரம்பரியமிக்க ‘தி இந்து’ குழுமத்தின் இளைய வாரிசான ’இந்து தமிழ்’ நாளிதழின் ஆசிரியர் குழுவின் ஆக்கத்தில் உருவாகியுள்ள மற்றுமொரு பெருமைக்குரிய படைப்பு ‘இந்து தமிழ் இயர்புக்’

₹ 525.00 Save ₹ 126

சைகோமெட்ரிக் தேர்வுகள்

பள்ளியிலும் கல்லூரியிலும் சிறப்பாகப் படித்து நல்ல மதிப்பெண்களைக் குவிக்கும் மாணவர்கள் அனைவராலும் நல்ல வேலைவாய்ப்பைப் பெற முடிவதில்லை. இதற்கு பல காரணங்கள் இருப்பினும் 21-ம் நூற்றாண்டு திறன்கள் குறித்த புரிதல் இன்னமும் பரவலாகாதது முக்கிய காரணமாக அறியப்படுகிறது. இந்த நூற்றாண்டுக்கென புதிதாக மனிதக்குலத்துக்கு ஆற்றல்கள் தேவைப்படுகிறதா என்றால் நிச்சயம் ஆமாம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் இது தொழிற்புரட்சி 4.0 காலம் என்றழைக்கப்படுகிறது. 19-ம் நூற்றாண்டில் தோன்றிய தொழிற்புரட்சியினால் பலவிதமான இயந்திரங்களுடன் மனிதர்கள் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்படுத்தியது. அதுவே தொழிற்புரட்சி 4.0 காலமானது இயந்திர மனிதர்களான ரோப்போகளுடனும் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மனிதர்களுடனும் கைகோர்த்து பணியாற்றும் அவசியத்தை உண்டுபண்ணியிருக்கிறது. இங்கு தொழில்நுட்ப திறன்களுக்கு இணையாக முன்பு எப்போதும் இல்லாததைவிடவும் கூடுதலாக மனவியல் திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

பொங்கல் மலர் – 2022 (சிறப்பு சலுகை – கூரியர் செலவு)

பொங்கல் மலர் 2022 தமிழ்நாட்டின் 10 கால்நடைச் சந்தைகள், பிரபல எழுத்தாளர் சுப்பாராவின் இளவயது மாட்டுப் பொங்கல் அனுபவங்கள், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சையில் உள்ள தேசிய உணவு அருங்காட்சியகத்தின் சிறப்புகள் ஆகியவை பொங்கல் பண்டிகையின் கொண்டாட்டத்தை இரட்டிப்பாக்கக்கூடியவை. ஆன்மிகம் பகுதியில் தமிழக ராமர் கோயில்கள், நிதிவன் கிருஷ்ணர் கோயில், பக்த மீரா பாயின் கதை, வைணவத்தின் அர்த்த பஞ்சகம் எனப் பல்வேறு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. திருநெல்வேலியைச் சேர்ந்த மூத்த ஓவியர் மாலையப்பனின் நாயன்மார் ஓவியங்களின் சிறப்புத் தொகுப்பு இடம்பெற்றுள்ளது. தமிழ் சினிமா இசையில் சாதித்துவரும் யுவன், ஜி.வி.பிரகாஷ், ஜிப்ரன், அனிருத், சந்தோஷ் நாராயணன், ஜஸ்டின் பிரபாகரன் உள்ளிட்ட இளமைத் துடிப்புமிக்க இசையமைப்பாளர்களின் வளர்ச்சி குறித்து சுவாரசியமான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கோவில்பட்டியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர்கள் நாறும்பூநாதன், உதயசங்கர், சாரதி, ஓவியர் மாரீஸ் ஆகியோரின் நட்பு, இலக்கிய ஆர்வம் குறித்து விரிவாகப் பேசுகிறது ஒரு கட்டுரை. எஸ். ராஜகுமாரன், சாளை பஷீர், இ. ஹேமபிரபா ஆகியோரின் மாறுபட்ட சிறுகதைகளும் இடம்பெற்றுள்ளன. பெண் கல்விக்காகப் பாடுபடும் நோபல் அமைதிப் பரிசு பெற்ற பாகிஸ்தான் இளம்பெண் மலாலா தொடங்கி 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அகதி அணியின் கொடியை கம்பீரமாக ஏந்திச் சென்ற சிரியாவைச் சேர்ந்த யுஸ்ரா மார்தினிவரை உலகின் போக்கை மாற்றிக்கொண்டிருக்கும் 10 இளம்பெண்கள் குறித்து பெருமைமிகு பெண்கள் பகுதியில் தனித்தனி கட்டுரைகள் அலசுகின்றன. ஆந்திரப்பிரதேச அரக்குப் பள்ளத்தாக்குப் பழங்குடிகள், அடையாறு தியசாபிகல் சொசைட்டியின் இயற்கை அம்சங்கள் குறித்த ஒளிப்படத் தொகுப்புகளும், கர்நாடகத்தின் ஆகும்பே மழைக்காட்டுப் பயணம், தூக்கணாங்குருவிகளின் கூடு கட்டும் நுட்பம் குறித்த கட்டுரைகள் பயண ஆர்வத்துக்குத் தீனி போடக்கூடியவை. நூற்றாண்டு காணும் வங்கத் திரைப்பட இயக்குநர் சத்யஜித் ராய் குறித்த கட்டுரை, எழுத்தாளர் யூமா வாசுகியின் அன்பளிப்பு சிறார் கதை ஆகியவையும் கூடுதலாக இடம்பெற்றுள்ளன.

அகத்தைத் தேடி

அஷ்டாவக்கிரர், அரிஸ்டாட்டில் காலத்திலிருந்து சத்தியம் என்பது வெளிப்படையாகவே உள்ளது. அதைப் புரிந்துகொள்வதற்கான திராணிதான் அனைவருக்கும் இல்லை. திறந்துகிடக்கும் உண்மையைப் பார்ப்பதற்கான எதிர்கொள்வதற்கான திராணி இல்லாத இடத்தில் தான் உண்மைக்குத் திரைபோடப்பட்டு பூசைகளும் புனஷ்காரங்களும் தொடங்குகின்றன. அனுஷ்டானங்களும் மடத்தனங்களும் நியமங்களும் மனிதனைப் பிரித்து வகுக்கும் பாகுபாடுகளும் தொடங்குகின்றன. நன்மை, தீமை, கருத்தியல், விருப்பு வெறுப்புகள், ஆசைகள், அச்சங்களால் மனிதர்களும் சமூகங்களும் தேசங்களும் தங்களுக்குள் போரிட்டு மாயும் காலத்தில் மனிதர்கள் நேசிக்க மறந்துவிட்ட சூழலில் தஞ்சாவூர்க்கவிராயர், நம்மையும் உள்ளடக்கிய இந்த உலகத்தை, சக உயிர்களை, இயற்கையை, மனிதர்களை, புலப்படுவதை புலப்படாத தை அணுகுவதற்கும் புரிந்துகொள்வதற்கும் தந்திருக்கும் சாவி ‘அகத்தைத் தேடி’.

0
Help & Support