Format: Print
Publisher: தமிழ் திசை
தமக்கு வேண்டிய தகவல்களை மட்டுமல்லாமல்; திறன்களையும் அறிவாற்றலையும் எளிதில் வசப்படுத்தும் வரப்பிரசாதத்தை இணையத் தொழில்நுட்ப வளர்ச்சி அவர்களுக்கு வழங்கியிருக்கிறது. இருப்பினும், அந்த வளர்ச்சியை அவர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தவறினால், ஏற்றத்துக்கு உதவும் தொழில்நுட்பமே அவர்களின் வீழ்ச்சிக்கும் காரணமாக மாறிவிடும். இந்தச் சூழலில், பேராசிரியர் அ. முகமது அப்துல்காதர் எழுதியிருக்கும் ‘வெல்லப் போவது நீ தான்’ எனும் இந்த நூல் முக்கியத்துவம் பெற்றதாக மாறுகிறது. இன்றைய நவீனத் தொழில்நுட்ப யுகத்தில், தேவைகளுக்கு அதிகமாகக் கிடைக்கும் திறன்களையும் அறிவாற்றலையும் கையாளும் சூட்சுமத்தை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் விதமாக இந்த நூலை அவர் எழுதியிருக்கிறார். ஒரு பேராசிரியர் என்கிற ஸ்தானத்திலிருந்து அவர் இந்த நூலை எழுதவில்லை என்பது, இதன் முக்கிய அம்சம். இந்த நூலின் நடை உரையாடலைப் போன்று எளிமையாக அமைந்திருக்கிறது.