தீபாவளி மலர் -2023
தீபாவளி மலர் 2023
தீபாவளி ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான அனுபவத்தைத் தந்திருக்கும். அப்படிப்பட்ட நினைவேக்கம் ததும்பும் அனுபவங்கள், மகிழ்ச்சியை, புன்னகையை வரவழைக்கும் பல்வேறுவிதமான அனுபவங்கள் படிக்கச் சுவாரசியம் தருபவை. பிரபல செஃப் ராகேஷ் ரகுநாதன், இந்த தீபாவளிக்கு பல்வேறு சிறப்பு உணவு வகைகளை நாமே தயாரிக்கும் வகையில் விரிவான குறிப்புகளை வழங்கியிருக்கிறார். அதேபோல், தீபாவளி உட்பட ஒவ்வொரு தமிழ் மாதங்களுக்கு இருக்கும் சிறப்பைப் பற்றியும், அவற்றில் கொண்டாடப்படும் விழாக்கள் பற்றியும் கவிஞர் கலாப்ரியா எழுதியுள்ளார்.
பாடை கட்டி நேர்த்திக் கடன் செலுத்தும் சீதளாதேவி கோயில், கிறிஸ்துவ-இந்துக் கோயில்களுக்கு இடையே ஆண்டாண்டு காலமாகத் தொடரும் பந்தம், தென் மாவட்ட கந்தூரி விழா ஆகியவற்றைப் பற்றிய கட்டுரைகள் ஆன்மிகப் பகுதிக்கு ஆழம் சேர்க்கின்றன. காஞ்சி காமகோடி மடத்துக்கும் திருவொற்றியூருக்கும் இருக்கும் தொடர்பு, தமிழிசை மூவர் ஆகிய கட்டுரைகளும் இந்தப் பகுதியில் இடம்பெற்றுள்ளன. ஆண்டாள் எழுதிய திருப்பாவை பாசுரங்களுக்கு ஓவியர் வேதா வரைந்த கண் கவர் ஓவியங்கள் இந்தப் பகுதியின் ஈர்ப்புமிக்க அம்சமாக இருக்கும்.
தமிழ்நாட்டில் டைனசோர் வாழ்ந்த பகுதிகளுக்கு ஒரு கட்டுரை நம்மை கைப்பிடித்து அழைத்துச் செல்லும் அதே நேரம், நீலகிரி மலைப் பகுதியின் மலர்களை அடையாளம் காண அழைக்கிறது மற்றொரு கட்டுரை. ஆசியாவின் மிகப் பெரிய ஏரி குறித்த ஒளிஓவியக் கட்டுரை, மோகனத் தீவு என அழைக்கப்படும் மடகாஸ்கருக்கு எழுத்தாளர் மாத்தாளை சோமு அழைத்துச் செல்லும் சுற்றுலா போன்றவற்றுடன் பயணப் பகுதி மிகுந்த சுவாரசியமாக அமைந்துள்ளது.
சினிமா பகுதியில் நூற்றாண்டு காணும் கலைஞர் கருணாநிதியின் வசனத்தில் வெளியாகிப் பிரபலமடைந்த படங்களுக்குள் ஒரு காலப் பயணம் சென்றுவரலாம். அதேபோல் நூற்றாண்டு நிறைவடையும் சிம்மக் குரலோன் டி.எம்.எஸ். குறித்து பிஜிஎஸ்.மணியன் எழுதிய கட்டுரை, 60 வயது காணும் இயக்குநர் சங்கரின் படைப்புகள் குறித்த கட்டுரைகள் சினிமா பகுதிக்கு மதிப்பு சேர்க்கின்றன. தமிழ்த் திரையுலகில் பெரும் புகழ்பெற்றுவிட்ட ரோலக்ஸ் கதாபாத்திரத்துக்கு அடிப்படையாக இருந்த ரோலக்ஸ் கடிகாரம் பற்றி ஒரு கட்டுரை விரிவாக அலசுகிறது. இயக்குநர்கள் கௌதம் மேனன், கே. பாக்யராஜ், நடிகைகள் ரேவதி,
கௌதமி, குஷ்பு ஆகிய திரைப் பிரபலங்களிடம் எழுத்தாளர் ஜி.எஸ்.எஸ். அந்நாளில் எடுத்த நாஸ்டால்ஜியா பேட்டிகள் தனித்துவமான பகுதி. திரைப் பிரபலங்களுக்கு இணையாக இந்நாளில் புகழ்பெற்றுவரும் யூடியூபர்ஸ் பற்றி மற்றொரு கட்டுரை பேசுகிறது.
இலக்கியப் பகுதியில் பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், ஆயிஷா இரா. நடராசன் எழுதிய சிறுகதைகள், ஏக்நாத் ராஜ் எழுதிய நேரடி அனுபவம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. பிரபல கவிஞர்களின் கவிதைகள், புகழ்பெற்ற நாவலாசிரியர்களின் பிரபல புத்தகங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
வாழ்வு இனிது பகுதியில் அந்தக் கால விளையாட்டுகள் குறித்து பாரதி திலகர் எழுதிய கட்டுரை, அயல்கிரக மனிதர்கள் குறித்து நன்மாறன் எழுதியுள்ள கட்டுரை, விண்வெளி சென்று திரும்பிய இந்திய வம்சாவளி வீராங்கனை சிரிஷா பண்ட்லாவின் பேட்டி, தமிழ் எழுத்துருக்களில் புதுமை காணும் வித்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.