நூலாசிரியர் முத்தாலங்குறிச்சி காமராசு ஒவ்வொரு வழக்கின்போதும் தாம் கண்டு, கேட்டு, உணர்ந்த அனுபவங்கள் நீதியரசர்களை வேள்விக்குள்ளாழ்த்தி நியாயத்தை வெளிக்கொணரச் செய்கின்றன. இந்நிலையில் இவ்வழக்குக்கு கிடைத்த நீதியரசர்கள் பாராட்டுக்குரியவர்கள். மேலும் இவர்களின் கேள்விக் கணைகளின் வாயிலாக ஆதிச்சநல்லூருடன் கூடிய தமிழகத்தின் தொன்மை பலமுறை உலகின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது என்ற வரலாறையும் நூலாசிரியர் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.