திய மருத்துவ முறைகள் சார்ந்த கவனம் தற்போது அதிகரித்துவருகிறது. இந்த நிலையில், ஒவ்வொரு நோயையும் இந்திய மருத்துவ முறைகள் எப்படிக் கையாளுகின்றன, குணமளிக்கின்றன என்பது குறித்து அறிந்துகொள்ள வாசகர்களிடையே ஆவல் எழுந்தது. ‘இந்து தமிழ்’ நாளிதழ் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே சில துறைகளில் கூடுதல் கவனம் செலுத்தி வந்தது. அவற்றில் மருத்துவமும் ஒன்று. மருத்துவத் துறையில் பொதுவாக அலோபதி மருத்துவ முறைக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படும். ‘இந்து தமிழ்’ நாளிதழில் நமது பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டது. அந்த வகையில் ஒன்றே கால் ஆண்டுக்கு மேல் டாக்டர் எல். மகாதேவன் ‘இந்து தமிழ்’ நாளிதழில் எழுதிவந்தார். இந்து தமிழ் வாசகர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு ஆயுர்வேத மருத்துவ முறை சார்ந்து டாக்டர் மகாதேவன் பதில்களை வழங்கி வந்தார்.