`பாரதியின் பூனைகள்' ஒவ்வொரு கட்டுரையையும் மாறுபட்ட கோணத்தில், எளிமையான மொழி நடையில், அழகான சொற்களைக் கோத்து தந்திருப்பதோடு... ஆங்காங்கே நமக்குள் மென்முறுவல் பூக்கும் வகையில் நகைச்சுவையும் தூவித் தந்திருக்கிறார் நூலாசிரியர் மருதன். தாகூர், சாவித்ரிபாய் புலே, ஆன் ஃப்ராங்க், கபீர், மொசார்ட், நியூட்டன், ஐன்ஸ்டைன், மாக்சிம் கார்கி, புத்தர், பாரதி, லூயி பிரெயில் என்று மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்ட அட்டகாசமான 25 கட்டுரைகள் உங்களுக்கு விருந்து படைக்கக் காத்திருக்கின்றன!