`ஞாலம் பெரியது. என்னுடைய ஞானம் சிறியது' என்னும் தன்னடக்கத்தோடு மகான்களைக் குறித்து கவிராயர் மேற்கொண்ட தேடல் பயணத்தின் பயனாக மலர்ந்திருக்கிறது இந்நூல். பக்கத்துக்குப் பக்கம் கவிராயர் அனுபவித்த ஆன்மிகச் சாரல், படிக்கும் உங்களையும் குளிர்விக்கும். முப்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளில் ஆன்மிகம் குறித்தும் மகான்களைக் குறித்தும் உங்களுக்கு எழும் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்.