பதின் பருவம் தொடங்கி, மாதவிடாய் நிற்றல் வரைக்கும் பெண்ணின் அகத்திலும் புறத்திலும் நிகழும் மாற்றங்களை அனைவருக்கும் புரியும் வகையில் எளிய மொழியில் விளக்கியுள்ளார் அமுதா ஹரி. இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ஞாயிறு இணைப்பான ‘பெண் இன்று’வில் தொடராக வெளிவந்தன. நேர்த்தியான உள்ளடக்கத்துக்காக அப்போதே வாசகர்களிடம் ஏகோபித்த வரவேற்பையும் பாரட்டையும் பெற்றன. இந்நூல் பெண்களுக்கானது மட்டுமல்ல; மகள், மனைவி, அம்மா எனப் பெண்களோடு பயணிக்கும் ஆண்களும் அவசியம் படித்துத் தெரிந்துகொள்வதற்கானது. பதின் பருவ மகள் ஏன் அடிக்கடி தனிமையை நாடுகிறாள், கருவுற்றிருக்கும் மனைவிக்கு ஏன் எதையும் பிடிப்பதில்லை, குழந்தை பிறந்த பிறகு மனைவியின் எரிச்சல் அதிகரிக்க என்ன காரணம், பேரக் குழந்தைகள் எடுக்கும் வயதில் அம்மாவை ஆட்டிப்படைக்கும் கவலை என்ன என்று நம்மில் பலருக்கும் பல்வேறுவிதமான கேள்விகளும் குழப்பங்களும் எழலாம். அவற்றுக்குப் பதில் சொல்லும் வகையில் அமைந்துள்ளது இந்நூல்.