பிரபல உடல்நல எழுத்தாளரான போப்பு உடலைச் சீர்படுத்தும் வழிகளை இந்த நூலில் முன்வைத்திருக்கிறார். நம் மரபில் உள்ள நல்லனவற்றை திரும்ப நமக்கு ஞாபகமூட்டியிருக்கிறார். நம் உடலின் முதன்மை உள் உறுப்புகளான கல்லீரல், இதயம், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகம் ஆகியனவற்றின் செயல்பாடுகள், அவற்றை புரிந்துகொள்வது எப்படி, மேம்பட்ட வகையில் பராமரிப்பது எப்படி என்று இந்தப் புத்தகம் விரிவாக விளக்கிச் சொல்கிறது. காயம் என்பது ஒன்றுமற்றதல்ல, ஊனும் உயிரும் சேர்ந்த உடம்பு. அதை முறையாக வளர்க்கவும் பராமரிக்கவும் தேவைப்படும் வழிகள் இந்த நூலில் கூறப்பட்டுள்ளன.