பெண்கள் அனைத்துத் துறைகளிலும் தடம் பதிக்கத் தொடங்கிவிட்ட பிறகும் இது ஆண்களின் உலகமாகவே இருக்கிறது. பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்திலுமே ஆண்களை முன்னிலைப்படுத்தும் சமூகத்திலேயே நாம் இருக்கிறோம். விதிவிலக்குகளாகச் சில இருக்கலாம். ஆனால், சமூகத்தில் அனைத்துப் பெண்களுக்கும் சமத்துவமும் சம உரிமையும் கிடைத்துவிட்டனவா? இந்தக் கேள்விக்கு விடைசொல்லும் வகையில் விளைந்ததுதான் இந்த நூல். இந்த நூல் பெண்களின் உரிமைகளைப் பேசினாலும் பெண்களுக்கானது மட்டுமல்ல; ஆண்களுக்கானதும்தான். காரணம் பெண்ணுரிமையைப் பற்றிப் பெண்களுடன் ஆண்களும் தெரிந்துகொண்டால்தான் சமத்துவச் சமுதாயம் அமையும். அப்படியொரு மாற்றத்தை நோக்கி இந்த நூல் நிச்சயம் உங்களை அழைத்துச் செல்லும்.