திரைப்பட நடிகர் என்பதைத் தாண்டி சிவகுமார் எந்த ஒரு விஷயத்தையும் சுலபமாக எழுத்தில் கொண்டுவர நினைக்க மாட்டார். கொண்டு வந்துவிட்டார் என்றால் அது நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். ‘சிவகுமார் ஏன் எல்லோருக்கும் இனிய மனிதராக இருக்கிறார்?’ என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. இந்த எழுத்துகளைப் படிக்கிற ஒவ்வொருவருக்கும், அந்தக் காரணங்கள் ஒவ்வொன்றாகப் புரியும். குறிப்பாக அவர் நினைவாற்றல், நன்றியுணர்வு, பிறந்த இடத்தை மறக்காமல் இருக்கிற தன்மை, சொந்த பந்தங்கள், நட்புகள் மீது வைத்திருக்கும் அன்பு-பாசம்-நேசிப்பு. இப்படி எல்லா விஷயங்களும் அதில் பயணிக்கும். நீங்களும் பயணிப்பீர்கள். அவருடன் சேர்ந்து இந்த கொங்கு தேன் என்ற நூலைக் கொண்டு வருவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்.