தமிழின் முதன்மையான எழுத்தாளர்கள் 16 பேர், கலை சார்ந்த ஆளுமைகளாகவும், அவரவர்களுக்கே உரிய பிரத்யேகக் குணங்களோடும் இந்த நூலில் வெளிப்பட்டுள்ளார்கள். ஒரு வாசகரோடு அந்த ஆளுமைகள் கிட்டத்தட்ட நெருங்கிக் கைகுலுக்கும் அனுபவத்தைக் கொடுக்கும் நூல் இது. தமிழ் நவீன இலக்கிய வரலாற்றை எழுதப்போகும் ஒரு ஆய்வாளருக்கு முன்னோடி நூலும்கூட. தமிழின் முன்னோடிப் படைப்பாளிகளின் புகைப்படங்கள், வாழ்க்கைக் குறிப்புகள் தொகுக்கப்படுவது சமீபகாலம் வரை தமிழ்ச் சமூகத்தில் உணரப்படாத பின்னணியில் ‘நடைவழி நினைவுகள்’ நூல் தமிழில் ஒரு சாதனை.