புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையின் அத்தனை பக்கங்களையும் ஒவ்வொருவரும் படித்தறிய இயலுமா என்றால், அதுவும் கேள்விக்குறிதான். அப்படிப்பட்ட கேள்விக்குறிக்கான பதிலை, தனது கருத்து ஏரைக் கொண்டு வாசிப்போரின் சிந்தனையில் ஆழ உழுது விதைக்கிறார். கூடவே, ஒவ்வொரு பெற்றோரும் கடனே என்று இருந்துவிடாமல் தங்களின் பொறுப்பையும் உணர வைக்கிறார். எதிர்காலத்தில் உறுதிமிக்க தேக்குமரமாக வளரத்தான் போகிறது என்பதற்காக, சின்னஞ்சிறிய கன்றாக இருக்கும்போது அதன் மீது நாம் சுமைகளை வைப்போமா? கனமான ஆணிகளை அறைவோமா? அப்படித்தான் இருக்கிறது இந்த கல்விக் கொள்கை என்று தனது கருத்துரையை தெளிவாக்கி இருக்கிறார்