இலங்கை முதல் அமெரிக்காவரை 20-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறார். காமதேனு மின்னிதழில், ‘சிறகை விரி... உலகை அறி’ என்ற தலைப்பில் தொடராக வெளிவந்த கட்டுரைகளுக்கு கிடைத்த பரவலான வரவேற்புக்கு பிறகு அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் முதல் பாகமாக, ‘மண்ணுக்குள் அரண்மனையும் மரண ரயில் பாதையும்’ என்ற தலைப்பிட்ட புத்தகத்தை அண்மையில் வெளியிட்டோம். அதன் இரண்டாம் பாகமாக இந்நூலை வெளியிடுகிறோம். நிச்சயம் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரையும் வாசகர்களை அந்த நாட்டிற்கே கைபிடித்து அழைத்துச் செல்லும். இதுவரை பயணம் செய்வதில் ஆர்வம் கொள்ளாதவர் மனத்திலும் ஆசை துளிர்க்கச் செய்யும். ஒவ்வொரு நாட்டின் முக்கிய நகரங்கள், அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்கள், சின்னங்கள், அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் உள்ளிட்டவை குறித்து அழகிய புகைப்படங்களுடன் கூடிய அருமையான பயண வழிகாட்டி இப்புத்தகம்.