‘சித்திரச் சோலை’ நூலைப் படிக்கும்போது ஒரு பன்முகக் கலைஞரின் வாழ்வு எப்படி ரத்தமும் சதையுமாக வார்த்தெடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். ஓவியர், நடிகர் என்ற இரு அம்சங்களில், இரு வேறு கோணங்களில் தன் ஒட்டுமொத்த அனுபவங்களையும் ‘சித்திரச் சோலை’யில் சிவகுமார் அவர்கள் வடித்துள்ளார். மிகச்சிறந்த மனிதராக, மார்கண்டேயராக அவர் திகழ்வதன் சூட்சுமம் அவரது சொல்லும், செயலும் ஒன்றாக இருப்பதும்... அளவிட்டு அறிய முடியாத ஒரு கலை உணர்வு எப்போதும் அவரை உயிர்ப்புடனும் விழிப்புடனும் வைத்திருப்பதும்தான் என்பதை இந்நூலின் மூலம் புரிந்துகொள்ளலாம்.