பன்முகக் கலைஞர் சிவகுமார், தனது வாழ்க்கையின் மிக முக்கியமான தருணங்களை ‘இது ராஜபாட்டை அல்ல’ என்கிற சுயசரிதை நூலாகப் படைத்தார். தமிழின் தலை சிறந்த வழிகாட்டி நூல்களில் ஒன்றாக, தமிழ் சினிமாவின் முக்கிய வரலாற்று நூல்களில் ஒன்றாக விளங்கிவரும் அந்நூலுக்குப் பின்னர், இனி எழுதுவதற்கு அவரிடம் எதுவும் மிச்சமில்லை என்றுதான் வாசகர் உலகமும் திரையுலகமும் எண்ணிக்கொண்டிருந்தன. ஆனால், அது உண்மையல்ல என்பதை எழுத்து, மேடைப்பேச்சு ஆகிய தளங்களில் அவரது தொடர்ச்சியான செயல்பாடுகள் நிரூபித்து வருகின்றன. திரையுலகம் குறித்து அள்ள அள்ளக் குறையாத தன் வாழ்வனுபவத்தின் நினைவுகளை மீட்டியும் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அன்றாடம் எழுதி வந்துள்ள தனது டைரிக் குறிப்புகளிலிருந்தும் சிவகுமார் பேசவோ எழுதவோ தொடங்கினால், அதிலிருந்து வாழ்ந்து மறைந்தவர்கள் உயிரோடு எழுந்து வருவதைக் காண முடியும். வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கோ அவரது எழுத்து பெரும் அங்கீகாரமாக மாறிவிடும். அவ்வளவு நினைவுகளையும் அறத்தின் பக்கம் நின்று அடுத்த தலைமுறைக்கு அச்சுப் பிசகாமல், உணர்வு குன்றாமல் கடத்திவிடுவதில் சிவகுமாருக்கு நிகர் அவர் மட்டும்தான். உண்மையும் வசீகரமும் நிறைந்த எழுத்துக்குச் சொந்தக்காரராக விளங்கும் அவர், இந்து தமிழ் திசையில் கரோனா காலத்தில் படைத்த வெற்றித் தொடர்கள் பல. அவற்றில் ‘திரைப்படச் சோலை’க்காக வாரம் தோறும் வாசகர்கள் காத்திருந்து வாசித்தார்கள். 50 வாரங்கள் அதிசயிக்க வைத்த ‘திரைப்படச் சோலை’ தொடர்தான் இப்போது புத்தக வடிவம் பெற்று மனதை கணக்கச் செய்யும் கனமான நூலாக இப்போது உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. பன்முகக் கலைஞர் சிவகுமார், தனது வாழ்க்கையின் மிக முக்கியமான தருணங்களை ‘இது ராஜபாட்டை அல்ல’ என்கிற சுயசரிதை நூலாகப் படைத்தார். தமிழின் தலை சிறந்த வழிகாட்டி நூல்களில் ஒன்றாக, தமிழ் சினிமாவின் முக்கிய வரலாற்று நூல்களில் ஒன்றாக விளங்கிவரும் அந்நூலுக்குப் பின்னர், இனி எழுதுவதற்கு அவரிடம் எதுவும் மிச்சமில்லை என்றுதான் வாசகர் உலகமும் திரையுலகமும் எண்ணிக்கொண்டிருந்தன. ஆனால், அது உண்மையல்ல என்பதை எழுத்து, மேடைப்பேச்சு ஆகிய தளங்களில் அவரது தொடர்ச்சியான செயல்பாடுகள் நிரூபித்து வருகின்றன. திரையுலகம் குறித்து அள்ள அள்ளக் குறையாத தன் வாழ்வனுபவத்தின் நினைவுகளை மீட்டியும் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அன்றாடம் எழுதி வந்துள்ள தனது டைரிக் குறிப்புகளிலிருந்தும் சிவகுமார் பேசவோ எழுதவோ தொடங்கினால், அதிலிருந்து வாழ்ந்து மறைந்தவர்கள் உயிரோடு எழுந்து வருவதைக் காண முடியும். வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கோ அவரது எழுத்து பெரும் அங்கீகாரமாக மாறிவிடும். அவ்வளவு நினைவுகளையும் அறத்தின் பக்கம் நின்று அடுத்த தலைமுறைக்கு அச்சுப் பிசகாமல், உணர்வு குன்றாமல் கடத்திவிடுவதில் சிவகுமாருக்கு நிகர் அவர் மட்டும்தான். உண்மையும் வசீகரமும் நிறைந்த எழுத்துக்குச் சொந்தக்காரராக விளங்கும் அவர், இந்து தமிழ் திசையில் கரோனா காலத்தில் படைத்த வெற்றித் தொடர்கள் பல. அவற்றில் ‘திரைப்படச் சோலை’க்காக வாரம் தோறும் வாசகர்கள் காத்திருந்து வாசித்தார்கள். 50 வாரங்கள் அதிசயிக்க வைத்த ‘திரைப்படச் சோலை’ தொடர்தான் இப்போது புத்தக வடிவம் பெற்று மனதை கணக்கச் செய்யும் கனமான நூலாக இப்போது உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கிறது.