தேடுதல்’ தான் மனிதனை முன்னேற்றத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. அதிலும் பொக்கிஷங்கள், புதையல்கள் பற்றிய தேடுதல் ஆதி காலம் முதல் இன்று வரை மனிதர்களின் வாழ்க்கையைச் சுவாரசியப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. அதனால்தான் குழந்தைகளின் விளையாட்டில் கூட `புதையல் வேட்டை’ முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. அபூர்வமான விலை மதிப்பு மிக்கக் கற்கள், அரிய நூல்கள், அரசர்கள், செல்வந்தர்கள் புதைத்து வைத்த நாணயங்கள், ஆபரணங்கள் என்று ஏராளமான பொக்கிஷங்கள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. எழுத்தாளர் முகில் தனக்கே உரிய சுவாரசியமான விறுவிறுப்பான நடையில் பொக்கிஷங்களின் வரலாற்றை எழுதியிருக்கிறார். `திறந்திடு சீஸேம்’ என்று சொன்னவுடன் மந்திரக்குகை திறந்து ஏராளமான செல்வத்தை அள்ளிக் கொடுப்பதுபோல், இந்தப் புத்தகமும் உங்களுக்கு ஆச்சரியத்தை அள்ளி வழங்கக் காத்திருக்கிறது!