
உடல் எனும் இயந்திரம்
அறிவியல் என்றாலே தனி சுவாரசியம்தான். அதிலும் மனித உடல் குறித்த மருத்துவ அறிவியல் - எளிமையாக எடுத்துச் சொல்லும்போது - எல்லோரையுமே ஈர்க்கக்கூடியது.
பள்ளிப் பாடங்களில் மனித உடல் குறித்த அடிப்படை விஷயங்களை மட்டுமே தெரிந்துகொள்ள முடிகிறது. அதையும் தாண்டி ஆயிரம் ஆயிரம் கேள்விகள் நம்முள் முளைத்துக்கொண்டே இருக்கின்றன. அவற்றுக்கெல்லாம் யாராவது பதில் சொல்ல மாட்டார்களா என்று ஏக்கம் வருகிறது.
‘<span style="font-size:10pt;"><span>இந்து தமிழ்’ நாளிதழின் இணைப்பிதழான மாயாபஜாரில் ‘உடல் எனும் இயந்திரம்’ என்ற தலைப்பில் தொடராக வெளிவந்தபோது மாணவர்கள்</span></span>, ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் என அனைவருமே தொடர்ந்து ஆர்வத்துடன் படித்து வந்ததில் வியப்பேதும் இல்லை.
நாம் சாப்பிடும் உணவு, எப்படி சக்தியாக மாறி நம் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது; உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் இதயம் ஒரு மோட்டார் என்றால், அதை இயக்குவதற்கான மின் சக்தியை எப்படி அதுவே உற்பத்தி செய்துகொள்கிறது; கல்லீரல், மண்ணீரல், சிறுகுடல், பெருங்குடல் ஆகியவற்றின் அதிசய இயக்கங்கள் என்னென்ன; நாக்கின் நிறம் மற்றும் மாவுத் தன்மையை வைத்தே நோய்களைக் கண்டறிவது எப்படி..?
இப்படி ரத்தம், மூளை என ஒவ்வொன்றாக தெளிவான அறிமுகம் தந்த இந்தத் தொடர் இப்போது புத்தக வடிவில் உங்கள் கைகளில்!