பெரிய நிறுவனத்தில் இத்தகைய பிரச்சினைகள் தோன்றியதா என்ற ஆச்சர்யம் மேலோங்கியதோடு, அத்தகைய சூழலை அந்நிறுவன அதிபர்கள் கையாண்டு மீண்ட விதம் நிச்சயம் பிரமிப்பாகத்தான் இருந்தது. 7 இந்திய நிறுவனங்கள், 6 அமெரிக்க நிறுவனங்கள் மட்டுமின்றி தனி நபர்களின் வீழ்ச்சியையும் அதிலிருந்து அவர்கள் மீண்ட விதத்தையும் சற்றும் சுவாரஸ்யம் குறையாமல் அதேசமயம் மிகைப்படுத்தாமல் நூலாசிரியர் எஸ்.எல்.வி.மூர்த்தி எழுதியுள்ளார். தோல்விகள் ஏற்படும்போது நமக்கு மட்டுமே என்று கழிவிரக்கம் தேடாமல், மற்றவர்கள் மீது பழி போடாமல் நிறுவனத்தை தூக்கி நிறுத்திய விதம் நிச்சயம் அனைவருக்குமான வாழ்க்கைப்பாடம். இது தொழில் நிறுவனங்களுக்கு, தொழில் முனைவோருக்கு மட்டுமல்ல தனி நபர்களின் தன்னம்பிக்கையை வளர்த்து முன்னேற வழிவகுக்கும் என்று நிச்சயம் நம்பலாம். வெறும் உதாரணங்களுடன் வெளியான கட்டுரைகளின் தொகுப்பல்ல. உண்மையான நிகழ்வுகளின் தொகுப்பு. இது நிச்சயம் படிப்பவர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும். தன்னம்பிக்கையை வளர்க்கும்.