வீடு என்பது செங்கல்லும் மணலும் கொண்டு எழுப்பப்படுவதல்ல. மனிதர்களின் அன்பாலும் உறவுப் பிணைப்பாலும் உருவாகும் கூடு அது. அதனுள் வாழும் மனிதர்கள் ஒருவரையொருவர் சார்ந்து வாழ்வதோடு இந்தச் சமூகத்துடன் அவர்கள் நல்லுறவைப் பேணுவதற்கான அடித்தளத்தையும் வீடே அமைத்துத்தருகிறது. குடும்ப உறவுகளுக்குள் புரிந்துகொள்ளாமையும் சுயநலமும் சில நேரம் ஸ்வர பேதமாக அமைந்துவிடுவதுண்டு. அதை எப்படிக் கையாள்வது என்கிற வாழ்க்கை ரகசியத்தை ‘பெண்கள் ஆண்கள் குழந்தைகள்’ எனும் இந்நூலில் சொல்லியிருக்கிறார் லதா. காதல், திருமணம், கணவன் - மனைவி உறவு, குழந்தை வளர்ப்பு எனக் குடும்ப வாழ்க்கையின் பல பரிமாணங்களையும் இந்நூல் தொட்டுச் செல்கிறது.