ஈரம் கசியும் நிலத்தைப் போல நெகிழ்வும் தன்மையும் நிறைந்தவை சு.தமிழ்ச்செல்வியின் படைப்புகள். அன்புதான் அவரது படைப்புகளின் அடிநாதமாக ஒலிக்கும். சுயநலமும் சுயமோகமும் மண்டிக்கிடக்கும் சமூகத்தில் இவரது கதைமாந்தர்கள், சக மனிதர்கள் மீதான பரிவோடு வலம்வந்து நம் மனசாட்சியை உலுக்கிப்போடுவார்கள். நான், எனது என்கிற தன்னகங்காரமும் காரிருளும் நிறைந்த மனங்களில் பரிவென்னும் ஒளியை ஏற்றி மனிதநேயத்தை மலரச் செய்வார்கள்.