பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்கிற சமூகத்தில் முதலில் அவர்களுக்கு ஆறுதல் அளிக்க வேண்டியிருக்கிறது; பேச வாய்ப்பு அளிக்கப்படாத பெண்களின் நியாயங்களை முன்வைக்க வேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியிருக்கிறது. அவர்களின் உரிமைகள் குறித்து வழிகாட்ட வேண்டியிருக்கிறது.
பல்வேறு நெருக்கடிகளை ஒட்டி நிகழ்த்தப்பட வேண்டிய பல உரையாடல்களை பிருந்தா சீனிவாசனின் ‘அவர்கள் பேசட்டும்’ நூல் உள்ளடக்கியிருக்கிறது.