இளையராஜாவுடன் இசையிரவு

இளையராஜாவுடன் இசையிரவு

Rs.150.00
இசையில் ஆழங்கால்பட்டவர்களையும் பாமரர்களையும் ஒருங்கே தன்னுடைய இசையால் மகிழ்ச்சியடைய வைப்பவர் இளையராஜா. அவருடைய இசையில் முகிழ்த்த பாடல்களிலிருந்து முத்தெடுப்பது போல் அரிய 35 பாடல்களைப் பற்றி ஒரு ரசிகனின் அனுபவத்தை முன்னிறுத்தி, ‘இந்து தமிழ் திசை’ இணையத்தில் குமார் துரைக்கண்ணு எழுதியதன் தொகுப்பே இந்நூல். இணையத்தில் இந்தக் கட்டுரைகள் வெளிவரும்போதே பெரும் வரவேற்பைப் பெற்றன.

நீண்ட பயணங்களின் துணையாக, உறவுகள் ஏற்படுத்திய காயங்களுக்கு மருந்தாக, புலம்பெயர்ந்து வாழ்பவர்களின் மனத்திலிருந்து எழும் மண்வாசனையாக... என ஒவ்வொருவருக்கும் இளையராஜாவின் இசையில் அமைந்த பாடல்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சிக் குவியல்கள் நூலின் பக்கங்கங்கள் தோறும் அணிவகுக்கின்றன.

ஒரு பாடலுக்கான திரைப்படத்தின் சூழலை மட்டும் பகிர்ந்துகொள்ளாமல், அந்தப் பாடலின் தொடக்க இசை, இடையிசை, அந்த இசையை வெளிப்படுத்தும் இசைக் கருவிகளின் பெயர்கள், அந்தக் கருவிகளை வாசித்திருக்கும் கலைஞர்களின் பெயர்கள், இசைத் துறையில் அவர்களின் சிறப்புகள் எனப் பலவற்றைப் பற்றியும் மேலதிக தகவல்களை கட்டுரையின் ஊடாக வழங்கியிருப்பதன் மூலம், படிப்பவர்களின் இசை ரசனையையும் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகள் வளர்க்கிறது.
Quantity
Add to Cart
Added to cart
Your cart has item(s).
- Can't add this product to the cart now. Please try again later.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.