உணவு சுற்றுலா - ஒரு பண்பாட்டுப் பயணம். உணவு என்பது வெறும் பசி ஆற்றுவதற்கான பண்டம் மட்டுமல்ல; அது ஒரு நிலப்பரப்பின் கலாச்சாரம், உழைப்பு மற்றும் வட்டார வாழ்வியலின் சாட்சியாகத் திகழ்கிறது என்பதை மருத்துவர் வி.விக்ரம்குமார் தனது ‘உணவு சுற்றுலா’ நூலில் மிக ஆழமாகப் பதிவு செய்துள்ளார்.
பயணங்களில் நான் ரசித்த ருசித்த சிறப்பு உணவுகளை வார்த்தைகளாகக் கொண்டு வரும் போது எனக்குள் உண்டாகும் உணர்வு பெருமகிழ்ச்சிக்கு ஒப்பானது! பயணம் செல்லும் நகரங்களிலும் குக்கிராமங்களிலும் உள்ள தனித்துவமான உணவுகளை, அவற்றின் சுவை அனுபவங்களை, கூடவே பயண அனுபவங்களை இந்த உணவு சுற்றுலா உங்களுக்காகப் பரிமாறப் போகிறது!