எப்படி ஒரு சிறு மின்மினிப் பூச்சியின் வெளிச்சம் இருளை கிழிக்குமோ அதுபோல் எழுத்தின் வலிமை காலத்தின் இருளை அசைத்துக்கொண்டே இருக்கும். அதுவே எழுத்தின் வலிமை. அதுவே ஒரு காலக்கட்டத்தின் நிகழ்வுகளை முன்வைத்து எழுதப்படும் எழுத்தின் வீச்சாகக் கருதப்படும். ‘உரையாடும் மழைத்துளி’, தீத்துளியில் உயிர்த்து வந்து விழுந்த லிபி. அரசாங்கத்திடமும் ஆண் மனது கொண்ட பெண்களிடமும் தமயந்தி பலவிதமான கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார். இந்தப் பூகோளத்தின் மத்தியில் நின்றுகொண்டு இரு கரங்களையும் பிரித்து அநாதரவாகக் கூக்குரலிட்டுச் சொல்வதன் குரல்தான் இந்தக் கோரிக்கைகள்.