செயற்கை நுண்ணறிவு (ஏஐ) யுகம் தொடங்கிவிட்டது. பல்வேறு துறைகளில் இந்தத் தொழில்நுட்பத்தின் தாக்கத்தைப் பார்க்க முடிகிறது. அன்றாடம் புழங்கும் சமூக வலைத்தளங்களில் உண்மையா, பொய்யா எனப் பிரித்தறியாத வகையில் ஏஐ படங்களும் காணொளிகளும் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன.
துறைசார் வல்லுநர்கள் இந்தத் தொழில்நுட்பத்தின் நுட்பத்தை அடைவதற்குப் பல கட்ட முயற்சிகளில் இருக்கும் நிலையில், சாமானியர்கள் இதன் பரிமாணங்களைப் புரிந்துகொள்ளத் தடுமாறுவதையும் பார்க்க முடிகிறது. இந்தச் சூழலில், ஏஐ சார்ந்த புரிதலை சாமானியர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் எழுத்தாளரும் பதிப்பாளருமான ஆழி செந்தில்நாதன், ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துப்பேழை பகுதியில் எழுதிய ‘ஏஐ எதிர்காலம் இன்று' தொடர் வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இந்தத் தொடரை ஒரு புனைவு போல ஆழி செந்தில்நாதன் எழுதியிருந்த விதம், ஏஐ தொழில்நுட்பத்தின் பரிணாமம் குறித்த பார்வையை மிக எளிதாக வாசகர்களிடம் சென்று சேர்த்திருக்கிறது.