காப்புரிமைத் தகவல்கள் என்பவை சாதாரணத் தகவல்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை. காப்புரிமை என்பது படைப்பாளிக்கான சட்டபூர்வ உரிமையை உறுதி செய்யும் ஆவணம் என்றால், காப்புரிமைத் தகவல்கள் என்பவை அறிவுசார் தளத்தில் புதிய படைப்புகளை உருவாக்கத் துடிக்கும் படைப்பாளிகளுக்கான ‘உந்துசக்தி’ என்று கூறுவது மிகையாகாது.
இந்நூல், காப்புரிமைத் தகவல்களைக் கொண்டு மாணவர்கள் தங்கள் கல்வித் துறையில் புதிய சிந்தனைகளை உருவாக்கவும், ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சியை சரியான பாதையில் செலுத்தவும், தொழில்துறை நிபுணர்கள் வணிகம் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேறவும், பொதுமக்கள் தங்கள் அறிவை விரிவுபடுத்திக் கொள்ளவும் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு எழுதப்பட்டுள்ளது.