காய்ச்சல் வந்துவிட்டால் சோர்ந்து படுத்துவிடுவோம். உடல் எல்லாம் ஒரே வலியாக இருக்கும். சாப்பிடக் கூடிய உணவு கசப்பாக இருக்கும். சாதாரண காய்ச்சலுக்கே இந்த நிலை என்றால் வைரஸ், பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் காய்ச்சலின் பாதிப்பு இதை விட பல மடங்கு அதிகமாக இருக்கலாம். காய்ச்சலை சரியான முறையில் கண்டுபிடித்து அதற்கு உரிய சிகிச்சை எடுக்கவில்லை என்றால் உயிர் இழக்க நேரிடும். ஆகவே காய்ச்சலைப் பற்றிய விழிப்புணர்வு ஒவ்வொருவருக்கும் தேவை. சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், கொசுக்களை ஒழித்தல், காய்ச்சல் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகி, முறையாக சிகிச்சை எடுத்துக்கொள்வது போன்ற செயல்பாடுகள் மூலம் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளலாம். நிபா வைரஸ், மலேரியா, டைபாய்டு, ஃப்ளூ காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், எலிக் காய்ச்சல், நிமோனியா, டெங்குக் காய்ச்சல், சார்ஸ் மற்றும் கொரோனா என 25 வகையான காய்ச்சல்கள் பற்றி இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.