குழந்தைகளுக்கு காலம் காலமாகச் சொல்லப்படும் கதைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை ஜென் கதைகள். வழக்கமான கதைகளில் பெரும்பாலும் நீதியைக் குழந்தைகள் தேடவேண்டியிருக்கும். சில சமயங்களில் கதையைச் சொல்பவர்களே ‘இதுதான் நீதி’ என்று சொல்லவேண்டியிருக்கும்.
நீதியே கதையாக மலர்வதுதான் ஜென். எழுத்தாளர், ஓவியர் முத்துவின் 28 கதையிலும் இந்த நுட்பம் வெளிப்பட்டிருப்பதுதான் சிறப்பு. குருவிடம் இருந்துதான் சீடன் எப்போதும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை, சில சீடர்களிடமிருந்து குருமார்கள் கற்றுக்கொள்வதற்கான தருணங்களும் மின்னல் வெட்டுகளாக இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன!