வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்ற முயற்சியில் சிலர் வெற்றி பெறுகிறார்கள். சில தோற்றுப் போகிறார்கள். வெற்றி தோல்வி இரண்டுக்கும் நம் மனநிலை தான் காரணம். நான் வெற்றி பெற்றே தீருவேன் என்று யாருடைய மனம் தீர்மானிக்கிறதோ அவர்கள் நிச்சயம் வெற்றி பெறுகிறார்கள்.
தோல்விக்கு மிக முக்கிய காரணம் தன்னம்பிக்கை குறைபாடு தான், அந்த குறைபாட்டை நிவர்த்தி செய்து மேம்படுத்திக்கொள்ள இந்நூல் வழிகாட்டும்.வெவ்வேறு விதமான தடைகளை தாண்டி வெற்றி பெற்ற 20 சாதனையாளர்களை உள்ளடக்கிய 20 கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. அந்த வகையில் இந்நூல் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய மிகச்சிறந்த வழிகாட்டி.