தமிழர் திருமண நிகழ்வில் பின்பற்றப்படும், ‘தாலி கட்டுதல்' எனும் பண்பாட்டை ‘தமிழர் திருமணத்தில் தாலி' எனும் இந்நூல் ஆராய்கிறது. திருமணங்களில் மணப்பெண் கழுத்தில் தாலி கட்டும் வழக்கம் தொன்றுதொட்டு வருகிறது என்கிறார்கள் சிலர். இல்லை, இடையில் வந்ததுதான் என்போரும் உளர்.
அவ்வகையில், ‘தமிழர் திருமணத்தில் தாலி' எனும் ஆய்வுப் பயணத்தை இந்நூலில் கவனமாக நகர்த்திச் செல்கிறார் தமிழகம் போற்றும் நல்லறிஞரான டாக்டர் மா.இராசமாணிக்கனார்.
மணப்பெண்ணுக்கு மணமகன் தாலி கட்டும் சடங்கு எப்போது தொடங்கியது என்பதை அறிய, தமிழர் வரலாறு, வாழ்க்கைமுறைகள், பண்பாடு, சடங்குகள் யாவும் காலவரிசைப்படி நுணுகி ஆய்ந்து, இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.