
பஞ்சபட்சி பஞ்சாங்கம் பாகம் - 2 ஏப்ரல் - டிசம்பர் 2025
நல்ல நேரம் அறிந்து செயல்படுவோம்!
கலைகளுள் மிகவும் மேன்மை பொருந்தியதாக போற்றப்படும் பஞ்ச பட்சி சாஸ்திரம், சிவபெருமானால் பார்வதிதேவியிடம் கூறப்பட்டதாக ஐதீகம். இந்தக் கலையை அறிந்திருந்தால், அனைத்திலும் வெற்றி காணலாம் என்று அறியப்படுகிறது.
பஞ்ச பட்சி சாஸ்திரத்தைக் கொண்டு வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகிய 5 பறவைகளின் குணநலன்களை மனிதரோடு ஒப்பிட்டு பார்க்கும் வழக்கம் உள்ளது. ஒருவர் பிறக்கும் நட்சத்திரத்தின் அடிப்படையில் அவருக்கான பறவை தீர்மானிக்கப்படுகிறது. பட்சி சாஸ்திரம், குருநாதரின் வழியாக சீடர்களுக்கு கூறப்பட்டு வந்தது. பார்வதி தேவி முருகப் பெருமானுக்கும், முருகப் பெருமான், அகத்தியர் போன்ற சித்தர்களுக்கும் இக்கலையை எடுத்துரைத்தனர். பார்வதி தேவி நந்திதேவருக்கும் இக்கலையை பயிற்றுவித்தார். நந்திதேவர் மூலம் போகருக்கும், போகர் மூலம் உரோமரிஷிக்கும் இக்கலை பயிற்றுவிக்கப்பட்டதாக ஐதீகம்.
பஞ்ச பட்சி சாஸ்திரத்தை நல்ல எண்ணத்துடன், யாருக்கும் தீங்கிழைக்காத வகையில், நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அரைகுறையாகப் புரிந்து கொண்டு சோதனை செய்து தனக்குத் தானே பிரச்சினைகளை தேடிக் கொள்ள வேண்டாம் என்று குருநாதர்கள் தங்கள் சீடர்களுக்கு எடுத்துரைப்பது வழக்கம். 12 ஆண்டுகள் சீடராக இருந்தால் மட்டுமே இக்கலை கற்றுக் கொடுக்கப்படும்.