இப்படி வேண்டி விரும்பி பெற்றோரால் பாராட்டிச் சீராட்டி வளர்க்கப்படும் குழந்தைகளின் அக வளர்ச்சியையும் புற வளர்ச்சியையும் அறிவியலின் துணை கொண்டு அலசி ஆராய்வதே ‘பதின் பருவ வாழ்வியல்’ நூலின் சாரம். நூலாசிரியர்கள் முனைவர் பெ.சசிக்குமார், M.ஜோதிமணி இணையர் அதனை செவ்வனே இந்நூலில் பதிவு செய்திருக்கின்றனர்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கூட்டுக் குடும்பங்களின் கதகதப்பில் பிள்ளை வளர்ப்பின் நெருக்கடிகள் எதுவும் பெற்றோர்களுக்கு இருந்ததில்லை. ஆனால், இன்றைக்கு தனிக்குடித்தனங்களே நடைமுறை யதார்த்தம் என்னும் சூழ்நிலையில், குழந்தை வளர்ப்பதில் பெற்றோர்களுக்கு ஏற்படும் தடுமாற்றங்களுக்கும் இந்நூல் உதவும்; பதின் பருவ குழந்தைகளுக்கும் இந்நூல் உதவும் என்பதே இந்நூலின் சிறப்பு.