சிறு சிறு முயற்சிகள், பயிற்சிகள் இருந்தாலே, நம் மக்களிடமும், சமூகத்திடமும் ஆக்கபூர்வமான விளைவுகளை ஏற்படுத்தும் மன மாற்றங்களை ஏற்படுத்தி விட முடியும். ஆனால், இந்த சமூகத்தின் மீதும், சமூகத்தின் அங்கத்தினர்களாக இருக்கக்கூடிய மக்களின் மீதும் அன்பு பாராட்டும் மனம் வேண்டும். இந்த நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் அனைத்தும், வாசிப்பவர்களிடம் மனிதநேயத்தை மேம்படுத்தச் செய்யும் என்றும், சக மனிதர்கள் மீது அன்பு கொள்ளச் செய்யும் என்றும் கார்த்திகேயன் தனது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். அவருடைய இந்தத் திடமான நம்பிக்கையே, இந்நூலில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகளின் கனத்தை வெளிப்படுத்துகின்றன.