கடலளவு கருத்துகளைக் கடுகளவு சொல்லில் அடைத்த மந்திரச் செப்பு திருக்குறள். இது வெறும் நூல் அல்ல; காலத்தின் கரங்கள் சிதைக்க முடியாத அறத்தின் பேரொளி. உலகமே ஒரு குடையின்கீழ் அமர்ந்து வாசிக்கக்கூடிய ‘உலகப் பொதுமறை’. மதம், இனம், மொழி என மனிதன் வகுத்துக்கொண்ட எல்லைகளைத் தகர்த்து, ‘மானுடம்’ என்ற ஒற்றைப் புள்ளியில் அகிலத்தை இணைக்கும் வல்லமை இதற்குண்டு. ஏழு சீர்களில் வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்கும் துடுப்பை வள்ளுவர் நமக்குத் தந்துள்ளார். திருக்குறள், தமிழன் உலகுக்குத் தந்த ஆகச்சிறந்த அறிவுக்கொடை.
சிறப்புமிக்க திருக்குறளிலிருந்து 100 குறட்பாக்களைத் தேர்வு செய்து, இன்றைய தலைமுறைக்கு ஏற்ற வகையில் இந்நூலைப் படைத்துள்ளார் மருத்துவர் ப.இரமேஷ்.