வானியல் ஆர்வலர்களுக்கு இரவு வானை உற்று நோக்குவது என்பது மிகவும் மகிழ்ச்சிகரமானது. கவிதையை விரும்பிப் படிக்கும் வாசகனுக்கு ஏற்படும் உணர்வுகளைப் போலவே, இரவு வானை உற்றுநோக்கும் வானியல் ஆர்வலர்களும் உன்னதமான உணர்வுகளைப் பெறுகிறார்கள்.
இரவு வானை பல நாட்கள், பல மாதங்கள், பல ஆண்டுகள் என தொடர்ச்சியாக உற்றுநோக்கும் பழக்கம் கொண்ட ஆர்வலர்களால்தான், இந்த பிரபஞ்சம் குறித்த பல புதிர்களுக்கு விடை காண முடிந்தது. மனித குல வளர்ச்சியில் இரவு வானை உற்று நோக்கியவர்களின் பங்களிப்பு என்பது மிக மிகக் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், சி.ராமலிங்கம் எழுதிய இந்நூல், விண்ணைத் தொடர்ந்து உற்றுநோக்கி, ஆராய்ந்து, பல அறிவியல் உண்மைகளைக் கண்டறிந்த விஞ்ஞானிகளைப் பற்றியது ஆகும்.