இந்தப் புத்தகம் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிப் பயணம் பற்றிய கதை மட்டுமல்ல; அவரைப்போல் பயணப்பட்டு எண்ணற்ற ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சவால்களைச் சந்தித்த அனைத்து விண்வெளி மனிதர்களின் கதையாகவும் இருக்கும்.
விண்வெளிப் பயணத்தின் சவால்கள், சாதனைகள், விண்வெளி நிலையத்தின் கட்டமைப்புகள் எனப் பல புதிய தகவல்களை இந்தப் புத்தகம் வாசகர்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும். விண்வெளிப் பயணங்கள் பற்றிய செய்திகளை வாசகர்கள் மனதில் காட்சி வடிவங்களாக மாற்றிக் காட்டும் வகையில் மிகவும் சிறப்பாகவும், மிக எளிய நடையிலும், கேள்வி – பதில் வடிவில் உரையாடலாக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது..