விண்வெளிக்குப் பயணம் செய்வது என்பது எளிதானது அல்ல, அது மிகவும் சவால் நிறைந்தது. இரண்டு ஆண்டுகள் மிக மிகக் கடினமானப் பயிற்சிக்குப் பின்னரே விண்வெளிக்குச் செல்கின்றனர். ஆகவே தான் அவர்கள் விண்வெளி வீரர்கள் என அழைக்கப்படுகின்றனர். மனிதனின் முதல் விண்வெளிப் பயணம் 1961ஆம் ஆண்டு தொடங்கியது. 2025ஆம் ஆண்டு ஜூலை வரை 756 வீரர்கள் விண்வெளிப் பயணத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 117 பேர் பெண் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்வெளியில் மனிதர்கள் சென்று தங்குவதற்கும், ஆய்வு செய்வதற்கும் எனச் சர்வதேச விண்வெளி நிலையம் உள்ளது. அது தவிர சீனா ஒரு நிலையத்தை விண்வெளியில் கட்டி வருகிறது. விண்வெளியில் வாழும் போது ஆணும், பெண்ணும் சமம். அங்கு எந்தப் பாகுபாடும் கிடையாது என பெண் வீரர்கள் கூறுகின்றனர்.