
வியக்க வைக்கும் விலங்குகள்
எல்லா உயிரிகளையும் நேசிப்போம்…!
இந்த பிரபஞ்சத்தில் உயிர்க்கோளம் என அழைக்கப்படும் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்வதற்கான இயற்கை தகவமைப்பு இருக்கிறது. நுண்ணுயிரிகள் தொடங்கி அனைத்து உயிரினங்களும் இந்த பூமியில் வாழ்வதற்கான உரிமையைப் பெற்றிருக்கின்றன. ஆனால் மனிதன் தனது சுய நலத்துக்காக, தன்னுடைய தேவைக்கு அதிகமாக இந்த பூமியின் செல்வங்களை சுரண்டுகிறான். மனிதனின் இந்தப் பேராசையால் பிற உயிரினங்களின் பாதுகாப்பு இங்குக் கேள்விக்குறி ஆகியிருக்கிறது. ஏராளமான உயிரினங்கள் அழியும் தருவாயில் உள்ளன.
மனிதனின் சுயநலத்துக்காக எந்த உயிரினமும் அழியக்கூடாது. இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலேயே அறிவியல் எழுத்தாளர் ஏற்காடு இளங்கோ, ‘வியக்க வைக்கும் விலங்குகள்’ என்கிற இந்த நூலை எழுதியிருக்கிறார். வரிக்குதிரை, நீர்யானை, துருவக் கரடி, கழுதைப்புலி, சிறுத்தை, ஒட்டகம், யானை, சிங்கம், காண்டாமிருகம், குரங்கு எனப் பல உயிரினங்கள் நம் பூமியின் செழிப்புக்கு ஆற்றிவரும் பங்களிப்பு பற்றி இந்நூலில் 35 கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.