சமூக கட்டமைப்பில் பின்தங்கியிருக்கும் இஸ்லாமிய சமூகத்திலிருந்து பல்வேறு தடைகளைத் தகர்த்து பல துறைகளிலும் முத்திரை பதித்திருக்கும் 25 ஆளுமைகளைக் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு இது. பேராசிரியர் அ.முகமது அப்துல்காதரின் தெளிவான நீரோடை போன்ற எழுத்து நடை கட்டுரைகளின் சிறப்பைக் கூட்டுகின்றன.
இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்த இளைய தலைமுறைக்கு புதிய பாதையையும் நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சக்கூடியவையாகவும் இந்தக் கட்டுரைகள் நூலில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கட்டுரையிலும் ஆளுமைகளின் திறமைகளுக்கு ஒத்திசைவாக ஜென் கதை, தத்துவங்கள் கையாளப்பட்டிருப்பது வாசகர்களின் வாசிப்பனுபவத்தை அதிகரிக்கும்.
மேனாள் நீதிபதி கே.என்.பாஷா, பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், மேனாள் நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி, பேராசிரியர் ஜவாஹிருல்லா, பத்ஹுர்ரப்பானி, எம்.அப்துல் ரஹ்மான், டாக்டர் ஜெ.சதக்கத்துல்லாஹ், பாத்திமா முசாபர், அகமது மீரான், முனைவர் சே.சாதிக், நவாஸ் கனி, சிங்கப்பூர் முஸ்தபா உள்ளிட்ட ஆளுமைகளின் கட்டுரைகள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.