இன்றைய நவீன, வேகமான உலகில் மனித சமுதாயம் எதிர்கொள்ளும் மிக முக்கிய சவால் உடல் மற்றும் மன நல பராமரிப்பாகும். ‘வருமுன் காப்பதே சிறந்தது’ என்ற பழமொழிக்கேற்ப, நோய்கள் வந்த பின் மாத்திரைகளாலும் அறுவை சிகிச்சைகளாலும் அவதியுறுவதை விட, இயற்கையோடு இயைந்து வாழும் முறையை இந்நூல் மிக அழகாக எடுத்துரைக்கிறது.
‘மருந்தே உணவு’ என்ற இன்றைய அவல நிலையை மாற்றி, மீண்டும் ‘உணவே மருந்து’ என்ற நிலையை அடைவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நூலின் முதன்மை நோக்கம்.