
ஏலியன்கள் இருக்கிறார்களா
* பூமி எப்படித் தானாகவே சுற்றிக் கொண்டிருக்கிறது?
* நிலவின் ஒரு பக்கத்தை மட்டும் நாம் காண்பது ஏன்?
* பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் ஏன் அதிகரிக்கவில்லை?
* ஆப்பம் வடிவில் விண்மீன் மண்டலங்கள் இருப்பது ஏன்?
* வால்மீன்களுக்கு வால் வந்தது எப்படி?
* குறுங்கோள்கள் பூமியைத் தாக்குமா?
* யுரேனஸ், நெப்டியூன் கோள்களில் வைரமழை பொழிகிறதா?
* விண்கலங்களுக்கு எரிபொருள் எவ்வாறு கிடைக்கிறது?
* விண்வெளிக் குப்பைகளால் பூமிக்கு அச்சுறுத்தல் வருமா?
* ஏலியன்கள் இருக்கிறார்களா?
இவ்வாறு விண்வெளி அறிவியல் குறித்து எழும் பல கேள்விகளுக்கு எளிமையாகவும் சுவாரசியமாகவும் பதில்களைத் தருகிறது இந்நூல். விண்வெளி அறிவியலை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் அறிவியலாளர் த.வி. வெங்கடேஸ்வரன் எளிமையான மொழிநடையில் இந்த நூலை எழுதியுள்ளார். இந்நூல், மாணவர்களிடமும் அறிவியல் ஆர்வலர்களிடமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
