தூக்கம் ஒரு வரம்

தூக்கம் ஒரு வரம்

Rs.300.00
தூக்கம் ஒரு வரம்
விலை: ரூ. 300/- 
முன்பதிவு சலுகை (20% சிறப்புத் தள்ளுபடி)

காலத்தின் வேகத்தில் மனித சமூகம் சந்தித்து வரும் பரபரப்பும், மன உளைச்சலும், மாறிவிட்ட நவீன வாழ்வியல் முறைகளும் இணைந்து நம்மிடமிருந்து பறித்துக்கொண்ட முதன்மையான பெருஞ்செல்வம் எதுவெனில், அது நம்முடைய நிம்மதியான தூக்கம்தான்!
இரவின் மடியில் ஆழ்ந்த துயிலைப் பெறுவது இன்றைக்குப் பெரும்பாலோருக்கு எட்டாக் கனியாகவும், சிலருக்கு மட்டுமே வாய்க்கும் அரிய பேறாகவும் மாறிப்போன அவல நிலையை நாம் காண்கிறோம்.
மூளையின் செயல்பாடுகளையும் நினைவாற்றலையும் ஒருமுகப்படுத்தி, உடலியக்கச் சமநிலையைப் பேணி, மனநலனையும் பாதுகாத்து வரும் மிகவும் அற்புதமான ஒரு சீரமைப்புச் செயல்பாடே தூக்கம்.
மனித வாழ்வின் அடிப்படை இயக்கத்திற்கு அத்தியாவசியமாக விளங்கும் இந்தத் தூக்கத்தைப் பற்றி மருத்துவ அறிவியல் உலகம் முன்னெடுக்கும் ஆழமான ஆய்வுகளைச் சாமானிய வாசகரும் எளிதில் உள்வாங்கும் வகையில் மிக எளிய மொழிநடையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
தூக்கத்தின் அறிவியல் பின்னணி, நிம்மதியான தூக்கத்திற்கு உதவும் வாழ்வியல் ஆலோசனைகள், தூக்கமின்மை உருவாக்கும் உடல் – மனநலப் பிரச்சினைகள், அவற்றை வென்றெடுப்பதற்கான எளிய மருத்துவத் தீர்வுகள் எனப் பல பரிமாணங்களில் தூக்கத்தின் மகத்துவத்தை இந்நூல் நுட்பமாக அலசுகிறது.
தமிழ்ச் சூழலில் மருத்துவ அறிவியல் கருத்துகளை மக்கள் மொழியில் எளிய நடையில் பரப்பி, தமக்கெனத் தனித்துவமான இடத்தைப் பதித்த மூத்த மருத்துவ எழுத்தாளர் டாக்டர் கு. கணேசன் அவர்கள், தமது பிற படைப்புகளைப் போலவே இந்நூலையும் சொல்லாட்சியோடும் மருத்துவத் தெளிவோடும் எழுதியுள்ளார்.
Choose Quantity
+ Add to Cart
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Close
Added to cart
Your cart has item(s).
- Can't add this product to the cart now. Please try again later.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.