வெற்றி சிந்தனைகள்

வெற்றிச் சிந்தனைகள்

Rs.250.00

வெற்றிச் சிந்தனைகள்

விலை: ரூ. 250/- 

முன்பதிவு சலுகை (20% சிறப்புத் தள்ளுபடி)



இன்றைய வேகமான உலகில், மனிதன் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் வெளிப்புற தடைகள் அல்ல; அவனது மனதிற்குள் உருவாகும் தயக்கங்களும் எதிர்மறை எண்ணங்களும்தான். தன்னம்பிக்கை தளரும் தருணங்களில் நம் தோள் தொட்டு, "உன்னால் முடியும், செயல்படத் தொடங்கு!" என்று தட்டி எழுப்பும் ஒரு நல்வழித்துணைவன் ஒவ்வொரு மனிதனுக்கும் தேவைப்படுகிறான். கல்வியாளராகவும், கார்ப்பரேட் மேலாண்மைப் பயிற்சியாளராகவும் இருபதாண்டுகளுக்கும் மேலாகப் பெற்ற அனுபவ முதிர்ச்சியோடு நூலாசிரியர் வி.எஸ். கோவிந்தராஜன் அவர்கள் ஆக்கியுள்ள இந்நூல், அந்த நல்வழித்துணைவனின் பணியைச் செவ்வனே செய்கிறது.

முப்பது அத்தியாயங்களில் வாழ்வின் எதார்த்தமான உண்மைத் தத்துவங்களை ஆசிரியர் வடித்துள்ளார். "வெற்றி என்பது எத்தனை முறை விழுந்தாய் என்பதில் இல்லை; ஒவ்வொரு வீழ்ச்சிக்குப் பிறகும் எத்தனை முறை மீண்டு எழுந்தாய் என்பதில்தான் அடங்கியிருக்கிறது" போன்ற தன்னம்பிக்கை ஊட்டும் பக்கங்கள் ஏராளம். சிறந்த வாழ்க்கைக்கானக்கோட்பாடுகளை வெறும் வரண்ட தத்துவங்களாகப் பேசாமல், வரலாற்று நாயகர்கள் மற்றும் விளையாட்டு உலக சாதனையாளர்களின் வாழ்க்கைச் சம்பவங்கள் மூலம் விளக்கியிருப்பது இந்நூலை ஒரு வரலாற்று ஆவணமாகவும் வழிகாட்டியாகவும் உயர்த்துகிறது.

மாணவர்கள், இளைஞர்கள், தொழில் முனைவோர்கள், கார்ப்பரேட் ஊழியர்கள் மற்றும் தலைமைத்துவத்தை விரும்பும் அனைவரும் தங்கள் மேஜையில் வைத்திருக்க வேண்டிய ஓர் அத்தியாவசியப் பேழை இந்நூல். இதனை வாசித்து முடிக்கும் ஒரு வாசகர், வாசிப்பதற்கு முன் இருந்த அதே மனிதனாக இருக்க முடியாது; நிச்சயம் ஒரு படி உயர்ந்த சிந்தனையோடும், தெளிவான இலக்கோடும் மறுஅவதாரம் எடுப்பார் என்பது நிச்சயம்.

Choose Quantity
+ Add to Cart
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Close
Added to cart
Your cart has item(s).
- Can't add this product to the cart now. Please try again later.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.